கந்தளாய் சூரியபுர பகுதியில் குழி ஒன்றில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யானைக் குட்டி ஒன்று பல மணிநேர முயற்சியின் பின்னர் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கந்தளாய் – சூரியபுர ஜனரஞ்சன குளத்தை அண்டியுள்ள வயற் பகுதியில் உள்ள குழி ஒன்றில் கடந்தபுதன்கிழமை யானைக்குட்டி ஒன்று விழுந்து அசைய முடியாத நிலையில் இருந்தது.

இதனை மீட்பதற்காக இயந்திரங்களின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை குறித்த யானைக்குட்டி மீட்கப்பட்டது.
இதன் பின்னர் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் யானைக் குட்டிக்கு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.

















