கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையினைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பில் உள்ள சீதாவாக்க பிரதேச செயலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் ஹொரண, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

















