இலங்கையிலும், இந்தியாவிலும் இம் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நடைபெறவுள்ள ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் நாடுகளில் ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது.
கடைசியாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணம் இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.
சி.சி.சி மைதானத்தில் நேற்றைய தினம் பாடசாலை வீராங்கனைகள் பங்குபற்றிய மென்பந்து கிரிக்கெட் போட்டியுடன் மகளிர் உலகக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் நியூஸிலாந்து வீராங்கனைகளும் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய தினம் தாமரைக் கோபுரத்தில் பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 7 மணிவரை பொதுமக்களின் பார்வைக்கு மகளிர் உலகக் கிண்ணம் வைக்கப்படும்.
இந்த நிகழ்வில் தேசிய வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
















