நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உட்பட பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டி, மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கமானது நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு அளித்துள்ளது.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளார்.
அவரது பதவி விலகலை நீதிச் சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதையடுத்து நேற்றைய தினம் புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு விஜயம் செய்த நிலையில் நீதவானின் சமாதான அறை மற்றும் நீதிமன்றத்தில் நீதவானின் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என்பவற்றை நீதவான் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.


















