யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளானதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

குப்பிளான் கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் முன்பாக நின்ற பனை மரம், கடும் காற்று காரணமாக முறிந்து விழுந்ததில் வீடும், காரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அதனால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



















