2025/26 பெரு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதி மானியங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான உரத்திற்கான நிதி மானியத்தை வழங்குவதற்காக 33,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025/26 பெரு போகத்தில் பயிரிடப்படும் என மதிப்பிடப்பட்ட நெல் மற்றும் பிற வயல் பயிர்களின் மொத்த பரப்பளவைக் கருத்தில் கொண்டு, உரத்திற்கான நிதி மானியத்தை வழங்க சுமார் 5 பில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு தேவைப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உரத்திற்கான நிதி மானியங்களை செலுத்துவதற்காக 5 பில்லியன் ரூபாவை கூடுதலாக வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரும் கூட்டாக இந்த முன்மொழிவை சமர்பித்திருந்தனர்.


















