மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வு-56 தோட்டாக்கள் உட்பட பல்வேறு வகையான தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி வு-56 தோட்டாக்கள் உட்பட பல்வேறு வகையான தோட்டாக்கள் 715 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த இடத்தில் தோட்டாக்களை மறைத்து வைத்தது யார் என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















