மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தை அண்டிய பகுதியில் இன்று அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் 10 இற்கு மேற்பட்ட வீடுகளை முற்றாகவும், பகுதியளவிலும் சேதப்படுத்தியுள்ளதுடன், பயன் தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இதேவேளை உன்னிச்சை பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்னொருவர் இன்று அதிகாலை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை, இருநூறுவில், நெடியமடு, ஆறாம் கட்டை மற்றும் எட்டாம் கட்டை ஆகிய பகுதிகளில் அண்மைக் காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இதனால் இப் பகுதி மக்கள் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.
யானைகள், குடியிருப்புக்கள் மற்றும் வயல் வாடிகளையும் சேதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















