கித்துல்கலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து கரவனெல்ல மற்றும் கித்துல்கலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த தனியார் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்த் திசையில் வந்த லொறி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பேருந்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த லொறியின் சாரதி எட்டியாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















