வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பிரகாரம், நாரஹேன்பிட்டி, நாவல வீதியில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில், இதற்கான பிரிவினை நேற்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர திறந்து வைத்துள்ளார்.
இந்த அலுவலகத்தில், வெளியூர் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நடைமுறையில் உள்ள சந்தை விலைகளை விடக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றது.
எந்த நாட்டுக்கும் வேலைக்காக வெளிநாடு செல்லும் அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த வசதியினை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.


















