-அன்ரனி திலக்-
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னாலுள்ள இராணுவ சிற்றுண்டிச் சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகரசபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச் சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கபட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று ஆரம்பமானது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. அத்துடன் கனரக வாகனங்கள் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன் காலை 6.45 மணி முதல் 8 மணி வரையும், முடிவடையும் நேரத்தில் 12 மணி முதல் 2 மணி வரையும் பயணிக்கத் தடை விதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை முனையில் அமைந்துள்ள சிறுவர் மகிழ்வகத்திற்கு வருகை தருவோரிடம் 20 ரூபா பணம் பரீட்சார்த்தமாக 3 மாதம் காலத்துக்கு அறவிடுவது என்றும், மகிழ்வகத்தை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரையும் திறப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

















