டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘புளுமெண்டல் சங்க’ மற்றும் ‘மோதர நிபுண’வின் சகோதரர் ஆகியோர் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குற்றச் செயல்கள் மற்றும் தொடர்புகள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















