மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி மற்றும் பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் ‘பாட்டொன்றைப் பாடுவோம்’ சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் ‘பிறந்தநாள் சட்டை’ சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சிரேஷ்ட சட்டத்தரணியும் கலை இலக்கியச் செயற்பாட்டாளருமான சோ. தேவராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் வெளியீட்டுரையை மக்கள் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் சபா தனுஜன், அறிமுக உரைகளை ‘பாட்டொன்றைப் பாடுவோம்’ நூல் பற்றி ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆசிரியர் சோ.சிவனேஸ்வரன் , ‘பிறந்தநாள் சட்டை’ புத்தகம் பற்றி மகாஜனக் கல்லூரி ஆசிரியர் ந.தவசோதிநாதன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
உரைகளைத் தொடர்ந்து விசேட கலை நிகழ்வுகளாக நாடக ஆசிரியர் ஸ்ரீலேகா பேரின்பகுமாரின் எழுத்துருவில், அதிபர் க.பேரின்பகுமாரின் நெறியாள்கையில் காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய மாணவர்களின் ‘மணிப்பூனையார்’ மற்றும் சிவன்சுதனின் எழுத்துருவில், இ.ரஜிந்தனின் நெறியாள்கையில் ‘அயலார் தீர்ப்பு’ ஆகிய சிறுவர் நாடகங்களும், ஹரனின் எழுத்துருவில் ‘நாய் கடிக்கும் கவனம்’ நகைச்சுவை நாடகமும் இடம்பெறவுள்ளன. ஆர்வலர்கள் அனவரையும் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















