-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
இளவாலை ஹென்றியரசர் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் வணபிதா ஏ.மைக் மயூரன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பழைய மாணவரும், வவுனியாத் தெற்கு கல்வி வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளருமான சி.பி.பபோல் அமல்ராஜ் பிரதம விருந்தினராகவும், பழைய மாணவரும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அதிபருமான. பி.ஜெ. பியசீலன் சிறப்பு விருந்தினராகவும், இளவாலை பங்குத்தந்தை வணபிதா ஜே.ஏ.ஜேசுதாஸ் அடிகளார், பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளைத் தலைவர் ஜோர்ஜ் ஜெ.சுதன் மற்றும் பழைய மாணவர் சங்கத் தலைவர் எஸ்.பீட்டர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

















