-சொ.வர்ணன்-
உடுவில் பிரதேச செயலகம் இவ்வருடம் முன்னெடுத்த 54 வீடு திட்டங்களில் 28 வீடுகள் நிறைவடைந்துள்ளதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் 26 வீடுகள் திட்டங்கள் நிறைவடைந்து வருவதாகவும் குறித்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வேளையிலேயே அதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
2025இல் சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவில் 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 49 வீடுகளையும் ,0.9 மில்லியன் ரூபா பெறுமதியான 5 வீடுகளையும் நிர்மாணிக்க நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















