-த.சுபேசன்-
கொடிகாமம் பகுதியில் அனுமதி இன்றி இயங்கி வருகின்ற மதுபானசாலையை சீல் வைத்து மூடுமாறு சாவகச்சேரி பிரதேசசபையின் மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொடிகாமப் பகுதியில் உணவகம் நடத்துவதற்கு அனுமதி பெற்று விட்டு இரவில் மதுபான விற்பனை இடம்பெறுகின்றது.
எனவே சாவகச்சேரி பிரதேசசபை அனுமதி இல்லாத மேற்படி மதுபானசாலையை உடனடியாக மூடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.
அத்துடன் சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குள் பல விடுதிகள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருகின்றன.அவை தொடர்பிலும் பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதிவு செய்யப்படாத விடுதிகளில் போதைவஸ்து பாவனை மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட கலாசார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.


















