-இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு-
-பா.பிரதீபன்-
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புவசர் வாகனமும், மோட்டார் சைக்கிலும் மோதியே இவ் விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியை அண்டிய இடத்தில் நடந்த குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24), அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்தனர்.
சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும், இதன் போது மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவரும் உயிரிழந்திருந்தனர். குறித்த சம்பவத்தில் பவுசர் வாகத்தினை செலுத்தி வந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்.


















