அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார். என்ற காரணத்தை சுட்டிக்காட்டி சுயாதீன ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன், தகவல் தருகையில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பிரமுகர்கள் சிலரால் ஊடக நிறுவனத்திற்கு முறைப்பாடளிக்கப்பட்டதன் அடிப்படையில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் லூர்சன நாணயக்கார விஜயம் செய்தபோது நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்தை செய்தி அறிக்கையிட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவரது தாயின் அவலங்களை அமைச்சருக்கு வெளிப்படுத்தியமை,

ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல விடயங்கள் அரசாங்கத்திற்கு அபகீர்த்து ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாக சித்தரிக்கப்பட்டதன் அடிப்படையில், விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்பட்டால் ஊடக நிறுவனத்திற்கு விளக்கமளிக்க முடியும் என கூறிய நிலையில் அவ்வாறான விளக்கம் கொடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முpறினால் பொலிபூ; நிலையத்தில் ஊடக அடையாள அட்டையை கையளிக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுயாதீன ஊடாகவியலாளராக பணியாற்றும் நான், செம்மணி மனிதப் புதைகுழி, மக்கள் போராட்டங்கள் குறித்து அறிக்கையிடுவதுடன், தனிப்பட்ட சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்துவரும் நிலையில், தனிப்பட்ட சமூக வலைத்தள பக்கங்கள் குறித்தும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. என கூறினார்.
இதேவேளை, ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த நிலையில் அரசின் இவ்வாறான செயப்பாடுகள் கவனலையளிப்பதாக ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

















