-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
ஊரெழு கணேச வித்தியாசாலை ஆசிரியர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பழைய மாணவரும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினருமான தி.ஜெயதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் சி.குலேந்திரராஜா பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆசிரியர்களான திருமதி சா.ரவிச்சந்திரன், செல்வி இ.தம்பிமுத்து மற்றும் செல்வி கு.மார்க்கண்டு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.


















