-கஜிந்தன்-
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட நால்வர் காயமடைந்தனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணித்துள்ள நிலையில், திடீரென முச்சக்கரவண்யை நிறுத்தி, திருப்புதற்கு முயற்சித்தபோது பின்னால் வந்த கார் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பிரான்ஸ் நாட்டவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















