-இ.கலைஅமுதன்-
ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பியை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த ஐ.நா. நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, துணைவேந்தரையும் பாலின சமத்துவம் மற்றும் நீதிக்கான மையத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
மாணவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், வடக்குப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக மார்க் ஆண்ட்ரே பிராஞ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


















