யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான ஒருநாள் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அபார வெற்றி பெற்றது.
கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லூரி சார்பில் பாவணன் பெற்றுக் கொண்ட 81 ஓட்டங்களுடன் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் தேஸ்கர் 3, யுவ்ராஜ் 3, யாதவ் 2, சந்தோஷ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 221 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி 37.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அபினேஷ் 41 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நிதீஸ் 2, சிவகஜீசன் 2, அபிவர்ணன் 1, அணித்தலைவர் சுபர்ணன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.


















