-ஊரெழுப் பகுதியில் சம்பவம்-
-சி.ஜெகதீஸ்வரன்-
யாழ்.ஊரெழுப் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த மூன்று மாடிக் கட்டட படிக்கட்டால் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஊரெழு மேற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
சகோதரனினால் ஊரெழுப் பகுதியில் அமைக்கப்படும் மூன்று மாடி கட்டிட படிக்கட்டால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 12.40 மணியளவில் தவறி விழுந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை கோப்பாய் பொலிசார் நெறிப்படுத்தினர்.


















