இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும், அண்மையில் இந்திய அரசு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் விருதான ‘சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமை’ விருது பெற்றவருமான தமிழருவி த.சிவகுமாரன் எதிர்வரும் 21 ஆம் திகதி கனடா ரொறன்ரோ ஆர்மீனியன் சமூக மைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள கனடா ஈழநாடு பத்திரிகையின் 33 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘தாயகத்து வேர்களும் கனடிய விழுதுகளும்’ என்னும் பொருளில் அவர் சிறப்புப் பேருரை ஆற்றவுள்ளார்.
லண்டனில் 1998 இல் நடைபெற்ற முதலாவது உலக சைவ மாநாட்டில் கலந்து கொண்டதிலிருந்து இங்கு நடைபெற்ற பதின்மூன்று சைவ மாநாடுகளிற்கு இவர், அழைக்கப் பெற்று, சிறப்புரைகளை ஆற்றிய பெருமைக்குரியவர்.
கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டன், சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ், ஹொலண்ட், நோர்வே, கனடா, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் இலக்கிய, சமய அமைப்புகளால் தமிழ் இலக்கிய ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்காக
தொடர்ச்சியாக அழைக்கப்பட்டு வருபவர்.
இவரது பணிகளுக்காக இலங்கையின் புகழ்பூத்த கல்லூரியாகிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி தான் வழங்கிய முதலாவது வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழருவி சிவகுமாரனுக்கு வழங்கி தனது பழைய மாணவனைச் சிறப்பித்தது.


















