-ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க உத்தேசம்-
-துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு-
-பி.டிலக்ஷன்-
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் நீதவான் எஸ்.லெனின்குமாரினால் திகதியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கானது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்றையதினம் காலை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் பகுதியினை சட்ட வைத்திய அதிகாரியின் கண்கா ணிப்பின் கீழ் வாரத்தில் இரண்டு முறை துப்பரவு பணிகளை மேற்கொள்ளுமாறு நல்லூர் பிரதேச சபை க்கு நீதவானால் கட்டளையிடப்பட்டது.
மேலும் செம்மனி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் டித்வா புயல் மற்றும் அத னைத் தொடர்ந்து இடம்பெற்ற பேரணத்தங்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கட்டுமாணங்கள் அ னைத்தையும் அகற்றி முறையான விதத்தில் அமைக்குமாறும் நீதவானால் கட்டளையிடப்பட்டது.
மேலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு தேவையான தளபாடங்களை கடந்த அகழ் வுப் பணிகளில் வழங்கியதுபோன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் போதும் வழ ங்குவதற்கான ஒழுங்கமைப்புகளை செய்யுமாறும் நல்லூர் பிரதேசசபை செயலாளருக்கு நீதவானால் கட்டளையிடப்பட்டது. மேலும் அகழ்வுத் தளத்திற்கு களவிஜயம் மேற்கொண்டு அகழ்வுப் பணிகளை ஆரம்பதற்கான திகதியை தீர்மாணிப்பது என கட்டளையிடப்பட்டது.
அதன்பிரகாரம் நேற்று பிற்பகல் வேளையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் நீதவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்டவைத்திய அதிகாரி, நல்லூர் பிரதேச சபை செயலாளர் உள்ளடங்கலான குழுவினர் களவிஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தனர். இதன்போது செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுத் தளம் ஒன்றின் குழியில் வெள்ள நீர் தேங்கியிருப்பது அவதானிக்கப்பட்டது.
குறித்த வெள்ள நீரினை வெளியேற்றுகின்ற செயற்பாடுகளை எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி மேற்கொள்வது எனவும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.
அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் தொடர்பான முன்னாயர்த்த கலந்துரையாடலுக்காக வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வின் 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வின் 45 நாட்களும் என மொத்தமாக இதுவரை 54 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இதுவரை செம்மணி மனித புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக 240 மனித என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்த ப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் 239 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















