-க.கனகராசா-
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இருவருக்கு 70 ஆயிரம் தண்டப் பணம் அறவிடப்பட்டது.
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வெதுப்பகமொன்றிலும் மற்றும் பல்பொருள் அங்காடியொன்றிலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனையின் பொருட்டு களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்தான வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது எச்சரிக்கையுடன் முறையே 40,000 மற்றும் 30,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


















