-சு.பாஸ்கரன்-
கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் செய்யும் நடவடிக்கைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என்று கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வும், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக விவசாயத்திற்காக தண்ணீரைக் கொண்டு வருவதுதான் பிரதானமான நோக்கம் ஆகும். அங்கு சிங்கள மக்களை குடியேற்றுவது அதன் நோக்கமல்ல. அங்கு தமிழ் மக்களை குடி ஏற்றதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றார்.


















