-செ.ரவிசாந்-
விதையனைத்தும் விருட்சமே குழுமம், கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் மன்றம், கருகம்பனை இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தர் சனசமூக நிலையம் ஆகிய பொது அமைப்புக்கள் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆதரவுடன் கீரிமலையில் முன்னெடுத்த மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அன்றையதினம் கருகம்பனை சந்தியில் ஆரம்பமாகிய மேற்படி நடவடிக்கை கீரிமலை பிரதேசம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.
ஏற்கனவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் வீடுகள் தோறும் சேகரித்து வைக்கப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டதுடன் வீதியோரங்கள், பொதுவிடங்களிலிருந்த குப்பைகளும், கழிவுகளும் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினரின் வாகனம் மூலம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















