-சொ.வர்ணன்-
வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு கிராமத்தில் விதைகள் உறங்குவதில்லை எனும் செயற்றிட்டத்தின் கீழ் பனம் விதை நடுகை ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஆரம்பமானது.
கீழ் புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளுஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்ட நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் சி.வேந்தன், வடமராட்சி கிழக்கு சமூக ஆல்வலர்களான அ.ரெஜி மற்றும் விமலவன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


















