-தாக்குதலாளி பொலிஸில் சரண்-
-கஜிந்தன்-
குருநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,
இரண்டு நபர்களுக்கிடையே இடம்பெற்ற முரண்பாட்டால் கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
இதன்போது கத்தி வெட்டினை மேற்கொண்டவரின் தாயார் குறுக்கே வந்த நிலையில் தாயார் மீதும் தவறுதலாக தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


















