-சொ.வர்ணன்-
யா/கொக்குவில் இந்து கல்லூரி இடைநிலை மாணவர் அனுமதியின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்கள் மீறப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் மாணவர் அனுமதி தொடர்பாக பெற்றோர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் வலயக்கல்வி அலுவலகத்திடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


















