கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 வரை ஒத்திவைப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து, மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

















