93 ஆவது தேசிய மட்ட சிரேஷ்ட சேர். ஜோன். டாபர்ட் தடகளப் போட்டிகள் கொழும்பு தியகம மகிந்தராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இன்று இடம்பெற்ற 18 வயது ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மாணவன் நி.நிதன்றாஜ் 3.90 மீற்றர் உயரம் பாய்ந்து இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கி கொண்டார்.
நேற்று இடம்பெற்ற 20 வயது ஆண்கள் கோலூன்றிப் பாய்தலில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மாணவன் ந.டன்ஸ்சன் 4.40 மீற்றர் பாய்ந்து தங்கப்பதக்கத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















