-இராணுவத்திடம் கோரிக்கை முன்வைப்பு-
-கஜிந்தன்-
சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு கோரியிருந்த நிலையில் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக இராணுவத்தினர் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்,
சுழிபுரத்தில் 30 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அந்த காணியின் உரியவர்களான பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சங்கனை கிழக்கு பகுதியிலும் ஒரு இராணுவ முகாம் அமைந்திருக்கின்றது. அது தனியாரின் காணி. அந்தக் காணியையும் பொதுமக்களிடம் கையளிக்குமாறு நாங்கள் இராணுவத்திடம் கோரி இருந்தோம். அவர்கள் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார்கள என்றார்.


















