-சு.பாஸ்கரன்-
கடல் வளங்களை அழிக்கும,; மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சகல சட்டவிரோத செயற்பாடுகளையும் தடை செய்வதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் அழகாபுரி நன்னீர் மீனவர் சங்க கட்டடத்தினை நேற்று திறந்து வைத்து பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளது நிலையில் சட்டவிரோதமான அனைத்து தொழில்களையும் தடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.இந்த சட்டவிரோத தொழில்கள் இயற்கைக்கு மட்டுமன்றி; சிறுகடற் தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றதால் இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
இந்த கடல் எங்களுக்கு சொந்தமானதல்ல.மாறாக எதிர்கால சந்ததிக்கு சொந்தமானது. ஆகவே கடலை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
கடல் வளங்களை அழிக்கும் அல்லது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டுவைக்கும் சகல செயற்பாடுகளையும் தடை செய்வதற்கு நாங்கள் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் முடிவெடுத்து இருக்கின்றோம் என்றார்.


















