தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து மேலதிக வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் பரிசோதிக்கப்பட்டதுடன், காற்றோட்டம் உள்ளிட்ட சில அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அருகிலிருந்த கைதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சுரேஷ் சலேவுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
















