வருங்கால சந்ததியை புற்றுநோயில் இருந்து மீட்டெடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாண ஆளுநரின் சுற்றறிக்கையின் பிரகாரமும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட த்பட்ட உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞச்;சீற் பாவனை முற்றாக தடை செய்யப்படுவதாகவும் அதனை மீறும் பட்சத்தில் தண்டம் அறவிடப்படும் எனவும் நகரசபைத் தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
மேற்படி நடைமுறை 2026 ஆம் ஆண்டு முதலாம் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயம். ஆனால் நாம் மக்கள் விழிப்புணர்வு அடைவதற்காக ஒருமாத காலம் அவகாசம் வழங்கி அதனை நடைமுறைப்படுத்துகிறோம்.
உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் லஞ்ச்சீற் பாவனைக்குப் பதிலாக வாழையிலை, தேக்கம் இலை, காட்போட் பெட்டிகளில் உணவுகளை பரிமாற முடியும். அத்துடன் உணவுத் தட்டுக்களை உரிய வெப்பநிலையில் சுடுநீரில் கழுவியும் உணவு பரிமாற முடியும்.
உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக காணப்படும் லஞ்சீற் பாவனையை தடை செய்ய வேண்டியது அவசியம்.இதன் பாவனை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.
எனவே சாவகச்சேரி நகரசபையின் நடவடிக்கைக்கு உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் ஒத்துழைப்பு வழங்கி எதிர்கால சந்ததியினரை நோய்நொடியில் இருந்து காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 14)
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது வவுனியாவில் டித்வா சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 63 பேருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் 12.6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலர் பி.ஏ. சரத்சந்திர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலர் கலஞ்சலி டி.அருணசாந்தா, வவுனியா தெற்கு பிரதேச செயலர் காஞ்சன குமார, தொழில் முயற்சியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


















