-த.சுபேசன்-
சாவகச்சேரி நகரசபையின் செயற்பாட்டைக் கண்டித்து பொதுச் சந்தையில் உள்ள பாதிக்கப்பட்ட தேங்காய் வியாபாரிகள் நேற்று திங்கட்கிழமை காலை கடைகளை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரசபையினர் தேங்காய் வியாபாரிகளுக்கு இடையூறாக பாரிய மரம் ஒன்றைத் தறித்து வீழ்த்தியிருந்ததால்
தேங்காய்களை ஏற்றி இறக்குவதற்கு வியாபாரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும்,இதனால்
தேங்காய்களை லொரிகளில் ஏற்றுவதற்கு அதிகப்படியான கூலி ஆட்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நகரசபையினரின் செயற்பாட்டடைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு மகஜர் மகஜர் கையளித்ததாகவும் பாதிக்கப்பட்ட தேங்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் குறித்த நேரத்தில் தேங்காய் கொள்வளவு மற்றும் விற்பனையில் சில வியாபாரிகள் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி நகரசபையினர் சந்தை வளாகத்தில் மூன்று மாடிக் கட்டடத் தொகுதி ஒன்றை அமைக்கும் முனைப்பில் மரம் ஒன்றை தறித்து வீழ்த்திய நிலையிலேயே அதன் அடிப்பாகம் மொத்த தேங்காய் விற்பனை வியாபாரிகளின் ஏற நடவடிக்கைகளுக்கு இடையூறாக காணப்படுகின்றது.


















