-த.சுபேசன்-
சாவகச்சேரி நகரசபையில் நேற்று திங்கட்கிழமை மாவீரர்கள் மற்றும் முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் ஓர் அங்கமாக மேற்படி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது தவிசாளர்,உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மாவீரர்கள் மற்றம் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் மற்றும் தீப அஞ்சலி செலுத்தினர்.


















