-சி.ஜெகதீஸ்வரன்-
மகா சிவராத்திரியை முன்னிட்டு பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விசேட பேருந்து சேவைகளை இ.போ.ச.வின் பருத்தித்துறை சாலை முன்னெடுக்கவுள்ளது.
இந்த விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறையில் இருந்து நெல்லியடி-கொடிகாமம் – சாவகச்சேரி-பூநகரி ஊடாக திருக்கேதீஸ்வரம் வரை காலை – 5 மணி, காலை – 7 மணி, காலை- 9 மணி, மாலை 3 மணி, மாலை- 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தேவை ஏற்படின் மேலதிக பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்படும் என இ.போ.சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் தெரிவித்தார்.


















