யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்தோடு 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மாவட்டத்தில் அதிகூடியதாக சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்ததாக யாழ்.பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்று மட்டும் யாழ்.மாவட்டத்தில் 99.3 மில்லிமீற்றர் மழை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

















