-கஜிந்தன், கலைஅமுதன்-
யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் மின்னல் தாக்கம் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் கடும் காற்று காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணமாக 29 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேர் வெள்ளம் மற்றும் மின்னல் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.















