-க.சபேஷன்-
சுதுமலை அம்மன் ஆலயத்தை சூழ உள்ள பிரதேசம் புகையிலை பொருட்களின் பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம. ஜெயபிரதீப்பின் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள பிரதேசமும் புகையிலை பொருட்கள் தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் அனுசரணை வழங்கினர்.


















