-கஜிந்தன்-
சுன்னாகம் நகரை அண்டிய பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, தப்பியோடிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் நகரை அண்டிய பகுதியில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், எதிரில் வந்த நபர் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சி.சி.ரி.வி காட்சிகளின்; அடிப்படையில், மயிலிட்டி இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவச் சிப்பாயான சந்தேகநபரை கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.















