வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து அப் பகுதி மக்கள் குறித்த வீட்டில் வசித்து வந்த நபர் சில நாட்கள் வெளியே நடமாடாத காரணத்தால் அவ்வீட்டில் வசித்த நபரின் உறவினருக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக உரிய இடத்திற்கு சென்ற உறவினர்கள் வீட்டினை திறந்து பார்த்த போது வீட்டில் வசித்தவர் சடலமாக காணப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிசார்க்கு அறிவித்துள்ளனர்
இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது சடலமாக காணப்பட்டவர் செபமாலை செல்வ சிங்கம் என தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


















