1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வல்லுறவுக்குப் பின்னர் படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு செம்மணி வளைவில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


















