யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று மாலை கச்சதீவுக்கு விஜயம் செய்துள்ளார்.
வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி இன்று மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையிலிருந்து 4 படகுகளில் கச்சதீவுக்கு பயணமானார். குறித்த இடத்திற்கு சென்ற பின் அங்கு பல பகுதிகளைப் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அங்கு உள்ள பொது மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
























