-பா.பிரதீபன்-
டித்வா புயல் மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும் புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று இடம்பெற்றது.
யாழ். மாவட்ட சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் டித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் அனர்த்தத்தின் போது படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் பூரண குணமடைந்து சுகவாழ்வு வாழ வேண்டியும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சர்வமதத் தலைவர்களும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.


















