-சொ.வர்ணன்-
கருகம்பனை இந்து இளைஞர் மன்றம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தர் சனசமூகத்தின் ஏற்பாட்டில் விதையனைத்தும் விருட்சம் ஊடாக டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கருகம்பனை சந்தியில் இடம்பெற்றது.
வலி வடக்கு பிரதேசசபையின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இச் செயற்திட்டத்தில் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


















