தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பல ஆண்டுகளுக்கு பிறகு “தலைவர் 173” திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இந்நிலையில், இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இப்படத்திற்கு “தர்மன்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், “தர்மன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை பார்க்கும்போது, ரஜினிகாந்த் இப்படத்தில் மருத்துவராக நடிப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ரஜினி – கமல் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















